Monday 31 December 2012

பூசலார் நாயனாரின் கதை

பூசலார் நாயனாரின் கதைகோடி கோடியாய் கொட்டி அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால்தான் இறைவனின் அருள் கிடைக்கும் என்பதில்லை. அனுதினமும் மனதளவில் இறைவனை தியானித்தாலே போதும் பக்தர்களின் மனக்கோவிலில் இறைவன் எழுந்தருளுவான். இதனை பூசலார் நாயனார் மெய்ப்பித்திருக்கிறார்.
சிவபெருமானின் அருளைப்பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரான பூசலார் நாயனார் என்பவர் ஏழை சிவபக்தர்.திருநின்றவூரில் வசித்து வந்த அவர், சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்ப அயராது முயற்சி செய்தார். எனினும் எவரிடம் இருந்தும் பொருளுதவி கிடைக்கவில்லை.இதனால் துயரம் அடைந்த பூசலார் மனதிலேயே இறைவனுக்கு ஆலயம் கட்ட நினைத்து ஆகமவிதிப்படி அதற்காக பணிகளை மேற்கொண்டார். மானசீகமாக மனதில் கட்டிய கோவில் மளமளவென முடிந்தது. கோபுரம், விமானம், பலிபீடம், கொடிமரம் என பார்த்துப்பார்த்து மனதாலேயே கட்டிய ஆலயத்திற்கு குடமுழுக்கு செய்ய நாளும் குறித்தார் பூசலார் நாயனார்.

இதே நேரத்தில் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன், சிவபெருமானுக்கு கருங்கல்லால் ஆன அழகிய ஆலயத்தை கட்டியிருந்தான். வேதியர்களின் ஆலோசனைப்படி குடமுழுக்கு செய்ய நாள் குறித்தான் மன்னன். பூசலார் குறித்த நாளும், மன்னன் குறித்த நாளும் ஒரே நாளாக அமைந்தது இறைவனின் திருவிளையாடல்.குடமுழுக்கு தினத்தின் முதல்நாளன்று மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான். குடமுழுக்கு நாளினை மாற்றுமாறு கேட்டுக்கொண்டார். திருநின்றவூரில் உள்ள பக்தர் ஒருவர் கட்டிய ஆலயத்தில் எழுந்தருள இருப்பதாகவும் மன்னனிடம் கூறினார் இறைவன்.

இதனால் ஆவல் கொண்ட மன்னன், தனது பரிவாரங்களுடன் திருநின்றவூர் சென்று, பூசலாரை வணங்கி நின்றார். மன்னனே தம்மை காண வந்த நோக்கம் அறிந்த பூசலார் மெய்சிலிர்த்தார். தமது உள்ளக்கோவிலில் எழுந்தருள வேண்டி மன்னனையே வேறு நாள் மாற்றச் சொன்ன இறைவனை நினைத்து உள்ளம் உருகினார் பூசலார்.பூசலாரின் இறைபக்தியை உணர்ந்த மன்னன் அவரது வேண்டுகோளின் படி மனதில் கட்டிய ஆலயம் போலவே திருநின்றவூரில் ஒரு ஆலயம் எழுப்பினார். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த ஆலயம் தான் இன்றைக்கும் திருநின்றவூரில் கம்பீரமாக உள்ள இருதயாலீசுவரர் ஆலயம்.இந்த ஆலயத்தின் கருவறையில் ஈசனின் லிங்கத்துடன் பூசலாரின் சிற்பமும் இணைந்துள்ளது சிறப்பம்சம். தினமும் மனதில் நினைத்து வழிபட்ட பூசலார் நாயன்மாரின் கதை இன்றைய தலை முறையினருக்கும் சிறந்த பாடமாக அமைந்துள்ளது.

Thursday 13 December 2012

அருணகிரிநாதரின் பாதையில் திருப்புகழில் கூறப்பட்டுள்ள இடங்களுக்கு புனித யாத்திரை


திருவண்ணாமலையில் அருணகிரிநாதர்
திருவண்ணாமலையில் அருணகிரிநாதர்

வளையாப்பேட்டை ரா. கிருஷ்ணன்

ஆங்கிலக் கட்டுரைகள் தமிழில் மொழி பெயர்த்தது: சாந்திப்பிரியா
இது தர்மத்தில் மூர்த்தி எனும் சிலை, ஸ்தலம் எனும் இடம் மற்றும் புனித தீர்த்தம் போன்றவற்றுக்கு தத்துவ ஞானத்துக்குரிய முக்கியத்துவம் உள்ளது. நமது முன்னோர்கள் பல புனித இடங்களுக்கும் விஜயம் செய்து அங்குள்ள கடவுட்களை வழிபாட்டு வந்தார்கள். அதுபோல பல இந்து முனிவர்களும், சன்யாசிகளும் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் விஜயம் செய்து அங்கிருந்த கடவுட்களின் பெருமையைப் பாடி வருவதை தமது வாழ்கையின் குறிகோளாக கொண்டு இருந்தார்கள். அப்படிப்பட்ட பயணங்களில் அவர்கள் பல அற்புதங்களையும் நிகழ்த்தி இருக்கின்றார்கள். அந்த முனிவர் மற்றும் சன்யாசிகளினால் அந்த இடங்கள் பெருமைகளைப் பெற்றன. மூன்று தேவார முனிவர்கள் எனப்பட்ட சைவ பிரிவை சேர்ந்த முனிவர்கள் 275 ஆலயங்களுக்குச் சென்றும், ஆழ்வார்கள் எனப்பட்ட வைஷ்ணவ முனிவர்கள் 108 ஆலயங்களுக்கு சென்றும் அந்தந்த ஆலயப் பெருமைகளைக் பாடி உள்ளார்கள்.
14 ஆம் நூற்றாண்டில் முருகப் பெருமானினால் அருள் பெற்றவரான அருணகிரிநாதர் எனும் துறவி திருவண்ணாமலையில் அவதரித்தார். அருணகிரிநாதர் எனும் அந்த துறவி தென் இந்தியாவின் பல இடங்களுக்கும், வட இந்தியா மற்றும் ஸ்ரீ லங்கா வரை சென்று அங்குள்ள ஆலயங்களுக்கும் விஜயம் செய்து முருகப் பெருமானின் மீது பாடல்களைப் பாடி உள்ளார். இதில் முக்கியமானது என்ன என்றால் அருணகிரிநாதர் எங்கெல்லாம் விஜயம் செய்தாலும் அவர் முருகன் மீது மட்டுமே பாடல்களைப் பாடி உள்ளார். அப்படி அவர் விஜயம் செய்து பாடிய இடங்கள் திருப்புகழ் ஸ்தலங்கள் என்ற பெருமை பெற்றன. அவருடையப் பாடல்கள் மென்மையானவை மட்டும் அல்ல, அந்தந்த ஆலயங்களில் இருந்த சிலையின் வடிவமைப்புக்கள், ஆலய வரலாறு, அங்கிருந்த மக்களின் வாழ்கை முறை, அந்த தலத்தின் அமைப்பு போன்ற அனைத்தையும் விவரமாக எடுத்துக் கூறும் வகையில் அமைந்து உள்ளன. ஸ்கந்த முருகனின் பக்தர்கள் மற்றும் குமரனை ஆராதிப்பவர்களுக்கு அருணகிரிநாதரின் பாடல்கள் புனித வேதம் போன்றது. திருப்புகழின் மூலப் பிரதிகளை வீ.டி. சுப்ரமண்யம் பிள்ளை என்பவரே கண்டுபிடித்து, 1894 ஆம் ஆண்டு அதை வெளியிட்டார். அவருடைய மகனான வீ.எஸ். செங்கல்வராயப் பிள்ளை என்பவர் அதற்கு முன்னுரை எழுதினர் முருகன் வேல் பன்னிரு திருமுறை என்ற பெயரில் வெளியான அந்தப் புத்தகம் ஆறு பாகங்களாக இருந்தது. தணிகைமணி எனும் அதுவே ஆதாரபூர்வமான மற்றும் நம்பத்தக்க நூலாக இருந்தது. அதில் அவர் அருணகிரிநாதர் விஜயம் செய்து வழிபட்ட இடங்களைப் பற்றிய குறிப்பையும் வெளியிட்டு உள்ளார். ஆனால் அருணகிரிநாதர் விஜயம் செய்துள்ளதாக கருதப்பட்ட சில இடங்களைக் அவர்களால் எடுத்துக் காட்ட முடியவில்லை.
அந்த புத்தகத்தை மூல ஆதாரமாகக் கொண்டு நானும் என்னுடைய காலம் சென்ற சகோதரரான டாக்டர். ஆர். ராமசேஷனும் திருப்புகழில் கூறப்பட்டு இருந்த புனித இடங்களுக்கு சென்று அந்த இடங்களை ஆராய்ச்சி செய்து பயண நூல் ஒன்றை வெளியிட்டோம். அந்த புத்தகம் அந்த புனித இடங்களைப் பற்றி மட்டும் குறிப்பிடாமல் அந்த தலப்பெருமை, புராண ஆகம முறைகளின் முக்கியத்துவம், சின்னங்கள், கல்வெட்டுச் செய்திகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கி இருந்தது. அந்த இடத்துக்கு செல்ல விருப்பமுள்ளவர்களுக்காக அங்கு செல்லும் விவரமான வழிதடத்தைக் காட்டும் படத்தையும் கொடுத்தோம்.
தணிகைமணியின் கூற்றின்படி அருணகிரிநாதர் பாடியதாக கூறப்படும் 16,000 க்கும் அதிகமான பாடல்களில் 1,329 பாடல்கள் மட்டுமே கிடைத்து உள்ளன. ஆராய்ச்சியாளர்கள் அந்த எண்ணிக்கை 1361 என்று கூறுகிறார்கள். ஆகவே நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் முன்னர் தரப்பட்டு உள்ள கணக்கையே ஆதாரமாக எடுத்துக் கொண்டோம். அதன்படி அருணகிரிநாதர் 226 இடங்களில் மட்டுமே முருகன் மீதான பாடல்களைப் பாடி உள்ளார். 117 இடங்களில் முருகன் மீதான பாடல்களை மூன்று சைவப் பிரிவு முனிவர்கள் பாடி உள்ளார்கள். 208 இடங்களில் தனித்தனியான பாடல்கள் பாடப்பட்டு உள்ளன. மீதி உள்ள 18 பாடல்கள் மற்ற இடங்களிலும் காணப்படுகின்றன.
அருணகிரிநாதர் விஜயம் செய்ததாக கூறப்படும் புனித இடங்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவிக் கிடக்கின்றன. அவற்றில் நான்கு இடங்கள் வட இந்தியாவிலும், இரண்டு இடங்கள் ஆந்திராவிலும், கர்நாடகா மற்றும் கேரளாவில் ஒவ்வொரு இடங்களிலும் மற்றும் ஸ்ரீ லங்காவில் ஒரு இடத்திலும் உள்ளன. அவற்றிலும் எட்டு இடங்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை. எங்களுடைய ஆதாரபூர்வமான பயண புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரமான பயண செய்திகளைத் தவிர எங்களுடைய ஆராய்ச்சியில் நாங்கள் கீழ் குறிப்பிட்டுள்ள விவரங்கள் மீது அதிக கவனத்தை செலுத்தினோம்.
  1. திருப்புகழில் கூறப்பட்டு உள்ள இடங்களின் வரலாறு, இட அமைப்பு, பாடப்பட்ட பாடல்கள் என்பவற்றை மறு ஆய்வு செய்து அவற்றில் தேவையான மாற்றங்கள் இருந்தால் அவற்றையும் சேர்ப்பது
  2. கண்டு பிடிக்க படாமல் இருந்த இடங்கள்
  3. அந்தந்த ஆலயங்களில் இருந்த அபூர்வமான சிலையின் வடிவமைப்புக்கள், செதுக்கப்பட்டுள்ள வடிவங்கள்

I. திருப்புகழில் கூறப்பட்டு உள்ள இடங்களின் வரலாறு, இட அமைப்பு, பாடப்பட்ட பாடல்கள்- மறு ஆய்வு

பல இடங்களுக்கும் ஒரே பெயர்கள் இருந்தன. ஆகவே அந்த பாடல்களில் கொடுக்கப்பட்டு இருந்த செய்திகளின் விவரங்களை விவரமாக படித்து அதில் கொடுக்கப்பட்டு இருந்த இடத்தின் தன்மையை ஆராய்ந்து, அந்த இடத்தில் இருந்த ஆலயம் அந்த பாடலுடன் சம்மந்தப்பட்டதா என்பதை பார்க்க வேண்டி இருந்தது. கீழே தரப்பட்டு உள்ள எட்டு ஆலயங்களே உண்மையில் திருப்புகழில் கொடுக்கப்பட்டு உள்ள ஆலயங்கள் என்றும், அவை தணிகைமணியில் கொடுக்கப்பட்டு உள்ள ஆலயங்களுடன் ஒத்துப் போகவில்லை என்பதையும் காண முடிந்தது.
  1. நிம்பாபுரம்: சம்ஸ்கிருத மொழியில் நிம்பா என்றா வேம்பு அதாவது வேப்ப இலை என்று பொருள். ஆகவே தணிகைமணியில் அந்த இடம் வேப்பூர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இன்னொருமொரு செய்தியை அது குறிப்பிட்டு, விஜயநகர் ஆட்சி காலத்தில் ஹம்பி என்ற இடத்தின் அருகில் இருந்த இடமே நிம்பால்புரம் என சுட்டிக் காட்டி உள்ளது . ஆனால் அந்த இடம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு2 முன்னால் கோதாவரி நதியின் வெள்ளத்தினால் முற்றிலுமாக அழிந்துவிட அந்த இடம் இப்போது விளை நிலமாக உள்ளது. அங்கு தற்போது எந்த ஆலயமுமே இல்லை.
  2. கொடும்பை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலி மலை என்பதின் அருகில் உள்ள கொடும்பலூர் என்பதே இந்த இடம் (கொடும்பை) என்று தணிகைமணி தெரிவித்து உள்ளது 3 . நாங்கள் இலக்கியங்களை ஆராய்ந்தபோது சில இடங்களை சுருக்கி அழைத்துள்ளது தெரிந்தது. உதாரணமாக மயிலாபூரை மயிலை என்றும், தஞ்சாவூரை தஞ்சை என்றும் பாண்டிச்சேரியை புதுவை என்றும், சிருவாபுரியை சிறுவை என்றும் அழைப்பது தெரிந்தது. அது போலவேதான் கொடும்பாளூரை கொடும்பு என்று தணிகைமணி கூறி உள்ளது. ஆனால் நாங்கள் மேற்கொண்ட பல்வேறு ஆராய்ச்சியின் முடிவில் கொடும்பு என்பது எந்த இடம் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது 4. கேரளாவில் உள்ள பாலக்காட்டில் அற்புதமான சுப்பிரமணிய ஸ்வாமியின் ஆலயம் ஒன்று உள்ளது. அது தமிழ்நாட்டு கட்டிடக் கலையில் கட்டப்பட்டு உள்ள ஆலயம் ஆகும். தேர் போன்ற முக்கிய திருவிழாக்களையும் சேர்த்து அனைத்து திருவிழாக்களையும் அங்குள்ள ஆலயத்தில் அங்கு குடியேறி உள்ள மக்கள் கொண்டாடுகிறார்கள். பல காலத்துக்கும் முன்னரே காஞ்சிபுரத்தில் இருந்த கைகோல முதலியார் எனப்பட்டவர்கள் அங்கு சென்று குடியேறி உள்ளனர். அவர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு உள்ளார்கள். ஆகவே அருணகிரிநாதர் குறிப்பிட்டு உள்ள கொடும்பை எனும் ஆலயம் இதுவாகவே இருக்க வேண்டும்.
  3. மதுராந்தகாட்டு -வட -திரு -சித் -றம்பலம். இந்த இடத்தை தற்போது புளிப்பார்கோவில் என்கிறார்கள் 5 . இது பட்டாளத்தில் உள்ள மதுராங்கரத்தில் உள்ளது. திருக்கல்க் குன்ற தல புரணம் 6, இதை வியாக்கிர படபுரம் என்று குறிப்பிடுகிறது. அருணகிரிநாதர் வேண்டிக் கொண்டதின் பேரில் தமிழில் வேத பொன்னம்பலம் என்ற அர்த்தம் தரும் பெயரான ஹேமா சபேஸ்வரர் என்ற பெயரில் நடராஜப் பெருமான் இங்கு வந்து நடனம் ஆட, அந்த நடனத்தைக் கண்டு களித்த அருணகிரிநாதர் மனதார மகிழ்ச்சி அடைந்துள்ளார். தற்போது புல்லிப்பார்கோவில் ஆலயத்தில் தனது மனைவியான பாலகுஜாம்பாள் என்பவளுடன் உள்ளவரே வேதபுரீஸ்வரர் எனும் நடராஜர். 7 இங்கு வந்த அருணகிரிநாதர் வேத பொன்னம்பலத்தை, வட -திருக்- -சிற்றம்பலம் (பொன்னம்பலம் மற்றும் சிற்றம்பலம் என்ற இரண்டுமே ஒன்றேதான்) என்று கூறி அவரை புகழ்ந்து பாடி உள்ளார். திருப்புகழில் மதுராந்தகத்தில் உள்ள இன்னொரு முருகனின் ஆலயத்தை மதுராந்தகம் மனக்காரம் திகழ் முருகன் என்று கூறி உள்ளது. அந்த முருகனின் ஆலயம் தற்போது மதுராந்தகம் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள விளை நிலத்தில் பண்டீஸ்வரர் ஆலயம் என்ற பெயரில் உள்ளது. 8
  4. கரபுரம்: திருப்புகழில் கரபுரம் என்ற பெயர்களில் முடிவடையும் மூன்று பாடல்கள் காணப்படுகின்றன. அது போல இரண்டு பாடல்கள் விரின்சினால் அல்லது விரின்சினிபுரம் என்ற பெயருடன் முடிவடைகின்றது. தணிகைமணியின் கூற்றின்படி கரபுரம் மற்றும் விரின்சினிபுரம் என்ற இரண்டுமே ஒரே ஆலயம் என்று குறிப்பிட்டு உள்ளது. மார்க்க சானைய தேவர் எழுதி உள்ள திருவிரின்சை முருகன் பிள்ளைத் தமிழ் என்பதில் கரபுரத்தை கரபுரி என்று கூறி உள்ளது. அதுபோல விருன்சபுரம் ஸ்தல புராணத்திலும் அப்படியே கூறப்பட்டு உள்ளது. ஆனால் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் திருப்புகழில் கூறப்பட்டு உள்ள அந்த ஆலயம் தற்போது கரபுரம் எனப்படும் வேலூர் காவிரிப்பாக்கத்தில் உள்ள திருப்பாற்கடலில் உள்ள ஆலயமே என்று தெரிய வந்தது. பர்தவேன்டிரடி வர்மன் (957-970 BC) எனும் மன்னன் காலத்துக் கல்வெட்டில் இந்த ஆலயம் கரபுரீச்ஸ்வரர் ஆலயம் என்று குறிப்பிடப்பட்டும் அங்குள்ள மூலவரை கரபுத்து பெருமானடிகள் என அழைத்து இருப்பதும் தெரிகின்றது 10. ஆகவே தற்போது உள்ள திருப்பாற்கடல் எனும் கிராமமே அருணகிரிநாதர் வழிபட்ட கரபுரம் என்பது தெரிய வந்தது.
  5. அத்திப்பட்டு: தமிழ்நாட்டில் பல இடங்கள் இதே பெயரில் உள்ளன. தணிகைமணியின் கூற்றின்படி இந்த ஆலயம் புதுக்கோட்டையின் அருகில் உள்ள கந்தர்வக் கோட்டையில் உள்ளது 11. ஆனால் எங்களுடைய ஆய்வில் இந்த ஆலயம் நெய்வேலி லிக்னைட் கார்பரேஷனின் குடியருப்புப் பகுதியில் உள்ள வில்லுடயவன்பட்டு என்ற முருகன் ஆலயமே என்பது தெரிய வந்தது. அந்த ஆலயத்தில் வில்லுடன் காணப்படும் முருகனை அருணகிரிநாதர் வழிபாட்டு வந்துள்ளார். அதுவே திருப்புகழில் கூறப்பட்டு உள்ள அத்திப்பட்டு என்ற இடம் இதுவே ஆகும். இந்த ஆலயத்தில் உள்ள முருகன் வில்லுடன் உள்ளதினால் இதை வில்லுடயன்பட்டு எனப் பெயரிட்டு உள்ளார்கள். அரசின் வருவாய்துறை ஆவணங்களிலும் இதை முருகனுக்கு தனிக் கோவில் உள்ள அத்திப்பட்டு என்றே குறிப்பிட்டு உள்ளார்கள் என்பது எங்களுடைய கண்டுபிடிப்பிற்கு வலிமை சேர்த்தது .
  6. நல்லூர்: இந்த இடம் தஞ்சாவூரில் உள்ள பாபநாசத்தின் அருகில் உள்ளது. இங்குள்ள கோசெங்கட் சோழன் காலத்தில் கட்டப்பட்டதும், திருவாரூர் தியாகராஜா ஸ்வாமிகள் வந்து மூன்று நாட்கள் தங்கியதாகவும் தெரிவிக்கும் ஸ்தல புராணத்து ஆலயமான கல்யாணசுந்தரீஸ்வரர் என்பதே நல்லூர் 13 . இந்த குறிப்பை திருப்புகழில் கூறப்பட்டு உள்ள நல்லூர் பாடலில் சங்கர தியாகர் வந்துரை நல்லூர் என்று அருணகிரிநாதர் குறிப்பிட்டு உள்ளார். அது போலவே தியாகராஜர் இங்கு வந்து தங்கியதாக செய்தி உள்ளதினால் இந்த ஆலயமே அருணகிரிநாதரின் திருப்புகழில் உள்ள ஆலயம் என்பது தெரிகின்றது. தணிகைமணியில் பாபநாசத்தில் உள்ள நல்லூரை பற்றிய குறிப்பு இருந்தாலும்,14 அதில் அருணகிரிநாதர் குறிப்பிட்டு உள்ளது சிதம்பரத்தின் அருகில் திருஞான சம்மந்தர் திருமணம் செய்து கொண்ட அச்சார்புரம் ஆலயமே 15 என்று தெரிவித்து உள்ளது. இந்த ஆலயத்து மூலவர் பெயர் சிவலோக தியாகேசர் என்பது. அந்த மூலவரின் பெயரும், பாபநாசத்து தியாகேசர் ஆலயத்து பெயரும் ஒன்றாக இருந்தாலும், திருவாரூர் தியாகராஜா ஸ்வாமிகளின் பாபநாச நல்லூர் ஆலய விஜயம் மற்றும் அருணகிரிநாதரின் திருப்புகழில் காணப்படும் திருவாரூர் தியாகராஜா ஸ்வாமிகளின் குறிப்புடன் ஒத்து இருப்பதினால் திருப்புகழில் கூறப்பட்டு உள்ள நல்லூர் ஆலயம் பாபநாசத்தில் உள்ளதுதான் என்பது தெரிகின்றது.
  7. கீரனூர்: தணிகைமணி பழனியில் இருந்து தாராபுரத்துக்கு செல்லும் வழியில் உள்ள கீரனூரையே திருப்புகழில் குறிப்பிட்டுள்ள ஆலயமாக கூறி உள்ளது 16. ஆனால் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் கீரனூர் ஆலயத்தில் முருகன் சன்னதியே இல்லை என்பதும், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கீரனூரே திருப்புகழில் குறிப்பிடப்பட்டு உள்ள ஆலயம் என்பது தெரியவந்தது ( திருப்பரையலூர் என்ற இடத்தின் அருகில் உள்ளதும் அஷ்டவ்ரதா ஸ்தலங்களில் ஒன்றாகவும் கருதப்படும் இந்த ஆலயத்தின் மூலவர் சிவலோகனாதர் என்றும், அவருடைய மனைவியை பாலாம்பாள் எனும் ஷீராம்பாள் என்றும் அழைக்கின்றார்கள்)17. இந்த ஆலயம் சோழர்கள் காலத்தை சேர்ந்தது. ஷீரம் என்றால் பால் என்று பொருள். ஆனால் தமிழில் இதை கீரம் என்பார்கள். இந்த ஆலயத்தின் தேவியானவளை பால் கடலின் தேவி என்று அழைத்தார்கள் என்பதினால் இந்த இடத்தை பால் ஷீரனூர் அல்லது கீரனூர் என்று அழைத்து உள்ளார்கள். திருப்புகழில் கீரனூர் பற்றிய குறிப்பில் திருப்பால்கடல் பற்றிய செய்தியும் உள்ளது என்பதினால் எங்களுடைய கருத்து பலப்படுகிறது.
  8. குரிடிமலை: தணிகைமணி கோயம்பத்தூர் அருகில் உள்ள துடியலூர் என்பதே திருப்புகழில் கூறப்பட்டு உள்ள இடம் என்று கூறி உள்ளது. ஆனால் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் துடியலூருக்கு அருகில் உள்ள மலை குரிடிமலை அல்ல என்பதும், அங்கு எந்த ஆலயமும் இல்லை என்பதும் தெரிய வந்தது. ஆனால் இந்த மலை சீமா தடாகம் அருகில் உள்ள மலை என்பது தெரிய வந்துள்ளது. உள்ளூர் கிராமிய நிர்வாக அலுவலகத்தில் உள்ள ஆதாரம் மற்றும் கிராமிய மக்களின் செய்தி போன்றவை இந்த கிராமத்தில் உள்ள மலையின் பெயரை குரிடிமலை என உறுதிபடுத்துகின்றது 19. அந்த மலை மீது ஐந்து மைல் தூர அளவிற்கு நடந்து சென்றால், முன்னர் முருகன் ஆலயமாக இருந்த ஒரு விஷ்ணுவின் ஆலயம் தென்படுகிறது. அதுவே ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இருந்த முருகன் ஆலயம் என்பதை அங்குள்ள கல் பீடமும் எடுத்துக் காட்டுகிறது.

II. கண்டு பிடிக்க முடியாமல் இருந்த இடங்கள் கண்டறியப்பட்டன

தணிகைமணியில் கண்டு பிடிக்க முடியாமல் உள்ள இடங்கள் எனக் குறிப்பிட்டு இருந்த இடங்களை நாங்கள் எங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்தோம்.
  1. விசுவை: இந்த இடம் காஞ்சிபுரத்தின் உத்திரமேரூர் அருகில் உள்ள விசூர் என்பது கண்டறியப்பட்டது 20. இங்கு அகஸ்தீஸ்வரர் அகிலாண்டேஸ்வரர் என்ற ஆலயம் உள்ளது. இங்குள்ள ஆலயத்து தேவி விஸ்வரூபத்தைக் காட்டுவதாக இருந்ததினால் இதை விஸ்வ மாநகர் என்று அழைத்துள்ளார்கள். அதுவே மருவி விசுவை என்று அழைக்கப்பட்டுள்ளது. இங்கு வள்ளி மற்றும் தெய்வானையுடன் கூடிய அற்புதமான முருகனின் சிலை உள்ளது. ராஜராஜ சோழன் காலத்தை I (AR 387 of 1923) சேர்ந்த கல்வெட்டு வெட்டெழுத்தை ஆய்வு செய்தபோது கிடைத்த செய்திகளின்படி விசூர் அல்லது விசுவை என்றப பெயர்களைக் கொண்ட வேறு எந்த இடமுமே இல்லை என்பதினால் அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிட்டுள்ள இடம் இதுதான் என்பது தெளிவாயிற்று.
  2. முள்வை: வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தின் அருகில் முள்வைப்பலயம் என்ற இடம் உள்ளது. அதைப் போன்றப் பெயர் கொண்ட இடம் வேறு எதுவுமே கிடையாது என்பதினால் இதுவே திருப்புகழில் கூறப்பட்டு உள்ள இடம் எனத் தெரிகின்றது 22. ஆனால் துரதிஷ்டவசமாக தற்போது இங்கு சிவன் அல்லது முருகனின் எந்த ஆலயமும் இல்லை. ஆனால் உள்ளூர் கிராமத்து மக்களின் செய்தியின்படி சில வருடங்களுக்கு முன்னர் ஒரு இடத்தில் தண்ணீர் ஏரி கட்ட பூமியைத் தோண்டியபோது அங்கு புதைந்து இருந்த ஆலய தூண்கள் காணப்பட்டனவாம். ஆனால் அவை அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு ஆராயப்படவில்லை என்பதினால் தற்போது அங்கு ஆலயம் உள்ளதற்கான தடயம் கிடைக்கவில்லை.
  3. காமத்தூர்: வேலூர் மாவட்டது ஆரணி எனும் சிற்றூரில் காமக்கூர் என்ற இடம் உள்ளது 23. அங்கு உள்ள ஒரு சிவன் ஆலயத்தின் பெயர் ஸ்ரே சந்திரசேகர ஸ்வாமி தென்பது. அதில் மூலவருடன் உள்ளவள் அமிர்தாம்பிகை என்று கூறப்படுகிறாள். அதில் தேவி காமாஷியின் சன்னதியும் உள்ளது. இத ஆலயம் காமாஷியுடன் சம்மந்தப்பட்டு உள்ளதினால் அங்குள்ள நதியின் பெயர் காம நதி என்று இருந்துள்ளது. அந்த ஆலயத்து ஸ்தல புராணமும் காம நகர் புராணம் என்று தலைப்பிட்டுக் கொண்டு உள்ளது. ஆகவே காமத்தூர் மற்றும் காமக்கூர் என்ற இரண்டும் ஒன்றேதான் என்பது தெளிவாகிறது. இந்த புராதான ஆலயம் சோழர்கள் காலத்தை சேர்ந்தது. அதில் வள்ளி மற்றும் தெய்வானையுடன் ஒரு மயில் மீது அமர்ந்து கொண்டுள்ள காட்சியில் காணப்படும் ஷண்முகனுக்கு ஆறு முகம், மற்றும் பன்னிரண்டு கைகளும் உள்ளன. இதைப் போன்ற ஷண்முகன் தேவிகாபுரத்தில் உள்ள கண்ணகிரி ஆலயத்திலும் காணப்படுகிறார். இந்த ஆலயக் குறிப்பும் திருப்புகழில் காணப்படுகிறது 24. எங்கள் ஆய்வில் காமத்தூர் என்ற பெயரைக் கொண்ட வேறு எந்த இடமுமே இருப்பதாகத் தெரிய வரவில்லை.
    ஞான மலை -வள்ளி தெய்வானை சமேத முருகன்
    ஞான மலை -வள்ளி தெய்வானை சமேத முருகன்
    ஞான மலை சுப்பிரமணியர் ஆலயம்
    ஞான மலை சுப்பிரமணியர் ஆலயம்
  4. வைகை மாநகர்: தேவாரப்படல்களில் திரு ஞான சம்மந்தரினால் போற்றி பாடப்பட்ட சிவபெருமானின் ஆலயமான திருவலைப்பூத்தூர் என்பது தற்போது திரு வல்லபத்தூர் என்று அழைக்கப்படுகிறது 25. மயிலாடுதுறையில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில், பண்டநல்லூர் அருகில் இந்த இடம் உள்ளது. இங்குள்ள ஸ்தல விருத்ஷத்தின் பெயர் வைகை. ஆகவே அருணகிரிநாதர் இந்த தலத்தை வைகை மாநகர் என்று குறிப்பிட்டு உள்ளார். திருக்கல்லிமுன்றம் என்ற தலத்தின் தல விருட்ஷம் வாழை மரம். அதைக் கட்டலி வனம் என அருணகிரிநாதர் அழைத்து உள்ளார். கட்டலி என்றால் வாழை என்று அர்த்தம் 26. அதை வாகை மாநகர் என்றும் கூறுவார். திருவாடுதுறை ஆதீனத்தை சேர்ந்த மஹா வித்வானான மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை எழுதி உள்ள திருவல்லோலிபுத்தூர் என்ற ஸ்தல புராணத்தில்அதை அவர் வைகை மாநகர் என்றே எழுதி உள்ளார். இந்த ஆலயம் ரத்னபுரீஸ்வரரின் ஆலயம் ஆகும். ஆகவே இந்த தலமே திருப்புகழில் கூறப்பட்டு உள்ள ஆலயம் ஆகும்.
  5. ஞான மலை: இரண்டு திருப்புகழ் பாடல்களில் அருணகிரிநாதர் ஞான மலைக் கடவுளைக் குறித்து எழுதி உள்ளார். கடவுளின் அருளினால் அந்த இடம் வேலூர் மாவட்டத்தில் உள்ள காவிரிப்பாக்கம் என்பது தெரிய வந்துள்ளது. காவிரிப்பாக்கம் மற்றும் சோளிங்கருக்கு இடையே உள்ள கோவிந்தச் சேரி என்ற கிராமத்தில் உள்ள சிறிய மலையில் சிறிய பாலசுப்ரமணிய ஸ்வாமியின் ஆலயம் அமைந்து உள்ளது 27. இங்குள்ள பாலசுப்ரமண்யர் பிரும்மசாஸ்தா கோலத்தில், கையில் ருத்ராக்ஷ மாலை மற்றும் கமண்டலத்தை ஏந்திக் கொண்டு இருக்க அவருடைய இரண்டு பக்கங்களிலும் வள்ளி மற்றும் தெய்வயானை நின்று கொண்டு உள்ளார்கள். கரண்ட மகுடத்துடன் காணப்படும் அந்த சிலை பல்லவர் காலத்தை சேர்ந்தது. திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கு திருவண்ணாமலையார் தனது பாதத்தைக் காட்டி அருள் புரிந்துள்ளார். சிறிது பழுதடைந்து உள்ள அந்த சிலையின் ஆய்வு சமீபத்தில் நடந்தது. தண்டை மண்டலத்தை சேர்ந்த தளபதியான கலிகரையன் (1322-1340 AD) என்பவர் சம்புவராயர்களான ராஜ நாராயணன் I மற்றும் ராஜ நாராயணன் II என்பவர்களின் காலத்தில் ஞானமலை முருகன் ஆலயத்துக்குச் செல்ல படிக்கட்டுக்களை கட்டி உள்ளதாக அந்த கல்வெட்டுச் செய்திகளில் இருந்து தெரிய வந்துள்ளது. ஆகவே மிக முக்கியமான இந்த மலைக் கோவிலுக்கு அருணகிரிநாதர் வந்து அங்குள்ள ஆண்டவனை வணங்கி உள்ளார்.

III. வினோதமான உருவமைப்புக்களும், செதுக்கப்பட்டுள்ள சித்திரங்களும்

அருணகிரிநாதர் சென்றுள்ள பல் வேறு ஆலயங்களில் வினோதமான காட்சிகளில் உருவமைப்பும், செதுக்கப்பட்டிருந்த சிலைகளும் காணப்பட்டன. சிற்பக்கலை சார்ந்த புத்தகங்களில் காணப்படாத முருகனின் பல உருவங்களை நாம் இங்கு கண்டோம். அவற்றைக் காணும்போது அவற்றின் அழகு நம்மைக் கவருவது மட்டும் ஆளாமல் கொள்ளை அழகைக் கொண்ட அற்புதமான அவற்றைக் காணும்போது அவை நம்மை வியக்க வைக்கின்றது. அவற்றை பார்த்துக் கொண்டு இருக்கும்போது நம்மை நம்மை நாமே அறியா நிலையில் நம்மை நிற்க வைக்கின்றது. அவற்றின் சிலவற்றை இனி நாம் பார்போம்.
  1. மயிலாப்பூர்: வனப் பிடியும் கனகப் பிடியும் ( யானை மீது அமர்ந்துள்ள தெய்வானை மற்றும் வள்ளி).
    தெய்வானையும், வள்ளியும் தனித்தனியான யானைகள் மீது அமர்ந்துள்ள காட்சியை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தைத் தவிர வேறு எங்கும் நாம் காண முடியாது 28. தேவசேனா இந்திரனின் மகள், ஆனால் யானையினால் வளர்க்கப்பட்டவள். ஆகவே அவள் ஒரு யானை மீது அமர்ந்து உள்ளது ஏற்கப்பட்டதொன்று. அது வியப்பையும் தரவில்லை. ஆனால் யானை உருவில் வந்திருந்த வினாயகரின் உருவைக் கண்டு பயந்து ஓடிய வள்ளி எப்படி ஒரு யானை மீது அமைதியாக அமர்ந்து இருக்கின்றாள் என்பது நமக்கு வியப்பை தருகிறது. இங்கு சிங்காரவேலர் ஆறு முகத்துடனும், பன்னிரண்டு கைகளுடன் மயில் மீது அமர்ந்து கொண்டு உள்ளார். தனித்தனியான யானைகள் மீது முருகனின் மனைவிகள் அமர்ந்துள்ள காட்சியில் உள்ள சிலை வடிவம் அனைவரினாலும் பாராட்டப்பட வேண்டிய சிற்பம். அப்படிப்பட்ட உருவ அமைப்பை கூறிடும் செய்திகள் ஆகமத்திலும் இல்லை, ஷில்ப சாஸ்திரங்களிலும் இல்லை. இந்த நேரத்தில் கவனிக்க வேண்டியது என்ன என்றால் முருகனும் தனக்கு வாகனமாக யானையை வைத்து இருந்தது பிணி முக கோலத்தில் காணப்படுகிறது. சிருவாபுரி
  2. சிருவாபுரி வள்ளி மணவாளப் பெருமாள் (வள்ளி கல்யாண சுந்தரர்)
    முருகனுடையப் பல பெயர்களில் விசேஷமானது வள்ளி கணவன் என்பது. தேவலோக அதிபதி இந்திரனின் மகளான தெய்வானையை முருகன் மணந்து கொண்டார் என்றாலும், பூமியில் இருந்த வேடனின் மகளான வள்ளியை பூமியில் வந்து மணந்து கொண்டது தத்துவ ஞான முக்கியத்துவம் கொண்டதொன்று. வள்ளி நாயகன் என்ற இந்தக் கோலத்தின் மூலம் கடவுளுக்கு முன்னால் அனைவரும் சமமே என்ற தத்துவம் எடுத்துக் காட்டப்படுகின்றது 29 . வள்ளி இச்சா சக்தியாக காட்சி தருகிறாள். முருகனுடனான வள்ளியின் கள்ளத்தனமான காதலை எடுத்துக் காட்டுவது போல உள்ளது அவளுடைய மனதை களவு செய்து அவர் செய்து கொண்ட திருமணம். களவுக் காதலுக்கு அந்த திருமணம் ஒரு சிறந்த உதாரணம் என்று தமிழ் அறிஞர்கள் கருதுகிறார்கள். எப்போதுமே சிரித்த முகத்தோடு காட்சி தரும் வள்ளியுடனான திருமணம் கணவன் மனைவியருக்கு இடையேயுள்ள அன்பை வெளிப்படுத்துகிறது. அது ஒரு வீட்டில் எப்படி கணவன் மனைவியருக்கு இடையேயுள்ள உறவு இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது. அந்த வடிவமைப்பே வள்ளி கல்யாண சுந்தரர் என்பது. குமார தந்திராவில் இந்த நிலையில் உள்ள முருகனுக்கு ஒரு முகமும், நான்கு கைகளும் உள்ளதாக குறிப்பிடுகிறது. இந்த காட்சியில் உள்ள முருகனின் சிலையில் முன்புறத்தில் காணப்படும் இரண்டு கைகளில் ஒன்று அபய முத்திரையைக் காட்டிக் கொண்டு இருக்க இன்னொன்று இடுப்பின் மீது கையை வைத்துக் கொண்டு உள்ளது. பின் புறத்தில் உள்ள இடண்டு கைகளிலும் கமண்டலம் மற்றும் ருத்ராக்ஷ மாலை காணப்படுகின்றது. அந்த காட்சியில் உள்ளவரின் வலது பக்கத்தில் அழாகான வள்ளி நின்று கொண்டு இருக்கின்றாள். ஆக வள்ளியின் கைகளைப் பிடித்துக் கொண்டு திருமணக் கோலத்தில் முருகன் நிற்கும் வடிவம் சீவல்புரி ஸ்ரீ பால சுப்பிரமணிய ஆலயத்தில் மட்டுமே காணப்படுகிறது. ( இந்த ஆலயம் சென்னையில் இருந்து கும்முடிபூண்டி செல்லும் பாதையில் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது) . இங்குள்ள வள்ளி கல்யாண சுந்தரரை வணங்கி துதிப்பத்தின் மூலம் திருமணத்திற்காக நேரம் கைகூடும் என்றும், திருமணம் விரைவில் நடைபெறும் என்றும் நம்புகிறார்கள். தடைப்பட்டத் திருமணங்களும் தடைகள் விலகி நல்லபடியாக திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
  3. கங்ககிரி (தேவிகாபுரம்) சேனை (சேனாதிபதி)
    கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யம்போது கூறினாராம், ஸ்கந்தனே சேனானியாக, அதாவது பலதரப்பட்ட தேவர்களின் படையினருக்கும் தலைமை தளபதியாக இருக்கின்றார் என்பதினால் யாருக்கு வீரர்களாக இருக்க வேண்டுமோ அவர்கள் ஸ்கந்தனை சேனானியான உருவில் வழிபட வேண்டும். அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியர் மௌரிய மன்னர்களின் கோட்டை மதில் சுவர்களில் சேனானி இருந்ததாக குறிப்பிட்டு உள்ளார் 31. சூரபத்மனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் சிவபெருமானைக் கேட்டபோது, அவர் முருகனையே தலைமை தளபதியாக இருக்குமாறு ஆணையிட்டார். ஆகவேதான் அவரை சேனானி (பலதிறப் படையினருக்கும் தலைமை தளபதி) என்று அழைத்தார்கள். குமார தந்திரவின்படி அந்த உருவில் இருந்த ஸ்கந்தனுக்கு ஆறு முகங்கள் மற்றும் பன்னிரண்டு கைகள் இருந்தனவாம். ஆறு வலது கைகளில் ஒன்று அபாய முத்திரையைக் காட்டிக் கொண்டு இருக்க மற்ற கைகள் அனைத்திலும் வஜ்ராயுதம் , தாமரை மலர், கயிறு, கைத்தடி மற்றும் கதை போன்றவை இருந்தன. அப்படிப்பட்ட சேனானை உருவத்தில் உள்ள முருகனை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவிபுரம் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் காணலாம்.
  4. அமிர்தகார சுப்பிரமணியர் கோடி குலகர் கோவில்
    இந்த ஆலயத்தில் ஒரு அமிர்த கலசத்தை கையில் ஏந்தியபடி காட்சி தரும் முருகன், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அதை அருள் மழையாகப் பொழிவது போல காட்சி தருகிறார். இந்த மாதிரியான ஒரே ஒரு அபூர்வ சிலை கோடிக்கரையில் உள்ள குலகர் கோவிலில் உள்ளது. இந்த ஆலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தின் அருகில் உள்ளது 44. இங்குள்ள முருகனுக்கு ஒரு முகமும், ஆறு கைகளும் உள்ளன. மிகப் பெரிய உருவுடன் காட்சி தரும் அவர், மயில் மீது அமர்ந்திருந்து, தனது இருபுறமும் தனது மனைவிகள் இருக்கும் தோற்றத்தில் காணப்படுகிறார். வலது கை அபாய முத்திரையைக் காட்ட இடது கையில் அமிர்த கலசத்தை ஏந்தியவாறு உள்ளார். மற்ற கைகளில் சக்தி வேல், லில்லிப்பூ, வஜ்ராயுதம் மற்றும் தாமரை மலர் போன்றவை உள்ளன.
  5. சென்னிமலை அக்னிஜாதர்
    இது முக்கியமாக காண வேண்டிய ஒன்று. திருமுருகாற்றுப்படையில் இதைப் பற்றி நக்கீரர் ''ஒருமுகம் மந்திர விதியின் மரபுலி வள ஆண்டனர் வேள்வி ஓர்க்கும்மே'' என்று எழுதி உள்ளார். எட்டுக் கைகளுடனும், அக்னியைப் போன்ற இரண்டு முகங்களையும் கொண்டு தெய்வீக ஹோம குண்டத்தை ஏற்றுவது போல காட்சி தருகிறார். அவர் கைகளில் உள்ள பொருட்கள் வஜ்ராயுதம் , சேவல், கேடயம், நெய் கிண்ணம், நெய்யை ஊற்றும் மரக் கரண்டியான சுருவா, ருத்ராக்ஷ மாலை, எதிரிகளை அழிக்க ஏவப்படும் சுற்றிக் கொண்டே செல்லும் தட்டு எனும் ஸ்வஸ்திகா மற்றும் வாள் போன்றவை உள்ளன. ஸ்ரீ தத்வ நிதி முருகன் ஒரு ஹோம குண்டத்தின் எதிரில் அமர்ந்து உள்ள உருவம் என்று இதை வர்ணிக்கின்றது. ஆனால் சென்னிமலையில் உள்ள ஆலயத்தில் உள்ள முருகன் நின்றுள்ள கோலத்தில் காணப்படுவது அபூர்வமானது 32. அதைப் போன்ற உருவ அமைப்பு வேறு எந்த ஆலயத்திலும் கிடையாது. இந்த கோலத்தில் உள்ள அவரை தரிசிப்பவர்களுக்கு ஒரு யாகத்தை செய்ததின் பலன் கிடைக்குமாம்.
    தேவசேனாபதி
    தேவசேனாபதி
    கஜவாஹனர்
    கஜவாஹனர்
    கார்த்திகேயர்
    கார்த்திகேயர்
    தாரகாவை வதம் செய்த தாரகாரி
    தாரகாவை வதம் செய்த தாரகாரி
    திருப்போரூர்  கந்தஸ்வாமி ஆலய மண்டபம்
    திருப்போரூர் கந்தஸ்வாமி ஆலய மண்டபம்
    திருப்போரூர்சம்ஹார  மூர்த்திஅடுத்தது பிரணவ மந்திரத்தை அகத்தியருக்கு  போதிக்கும் முருகன்
    திருப்போரூர்சம்ஹார மூர்த்தி | அடுத்தது பிரணவ மந்திரத்தை அகத்தியருக்கு போதிக்கும் முருகன்
  6. ஸௌரபெய சுப்பிரமணியர்
    ஸ்ரீ தத்வ நிதியில் இந்த முருகனுக்கு நான்கு முகங்களும், எட்டுக் கைகளும் உள்ளதாகக் கூறி உள்ளது. மருகனின் வலது கால் நேராக பூமியின் மீது நின்றுருக்க, இடது கால் சற்றே வளைந்து இருந்தவாறு பூமியை தொட்டபடி உள்ளது. வலது கைகள் நான்கில் ஒன்றில் வரத முத்திரையைக் காட்ட மற்றவை வஜ்ராயுதம் , கரும்பிலான வில் மற்றும் திரிசூலத்தை ஏந்திக் கொண்டு உள்ளது. இந்த கோலத்திலான சுரபேய சுப்பிரமணியரையும் சென்னிமலை ஆலயத்தில் மட்டுமே காண முடியும்33
  7. தேவசேனாபதி
    இந்தக் கோலம் தேவசேனாவின் கணவரான முருகனைக் குறிக்கின்றது. தேவசேனா இந்திரனின் மகள். ஐராவதம் என்ற யானையினால் வளர்க்கப்பட்டவள். அதனால் அவளை தெய்வானை என்று அழைத்தார்கள். திருபரம்குன்றத்தில் அவளை முருகனுக்கு இந்திரன் மணமுடித்துக் கொடுத்தார். கந்த புராணத்தின் ஒரு முழுப் பகுதி அந்த தெய்வீக திருமணத்தைப் பற்றியே விவரிக்கின்றது. தேவசேனாபதியாக காட்சி தரும் முருகனுக்கு ஆறு முகங்களும், பன்னிரண்டு கைகளும் உள்ளன. இடது பக்கத்தில் நிற்கும் தெய்வானையை முருகன் தனது ஒரு கையினால் கட்டிக் கொண்டு இருக்க, ஒரு கையால் அபய முத்திரையைக் காட்டியவாறும், மற்ற கைகளில் சக்தி, திரிசூலம், அம்பு, வாள், கைத்தடி, வஜ்ராயுதம் , சேவல்கொடி, வில், கேடயம் மற்றும் தாமரை மலர் போன்றவற்றை ஏந்தியபடியும் காட்சி தருகிறார். தத்வநிதியின் செய்தியின்படி இந்த கோலத்தில் உள்ள முருகனுக்கு ஒரு முகம், இரண்டு கண்கள் மற்றும் நான்கு கைகள் உள்ளன. இரண்டு கைகள் அபாய மற்றும் வராத முத்திரையைக் காட்டிக் கொண்டு இருக்க மற்ற இரண்டில் ஒன்றில் சங்கு மற்றதில் ஒரு தட்டு போன்ற ஆயுதம் உள்ளது. இந்த உருவ அமைப்பும் சென்னிமலை ஆயத்தில்தான் உள்ளது34
  8. சிதம்பரம் : கஜவாஹனர் (கல்ரருர்டிப் -பெருமாள்)
    இந்த கோலத்தில் உள்ள முருகனின் வாஹனம் யானை ஆகும். ஆகவே அவரை கஜவாஹனர் என்றும் கஜாருத்தர் என்றும் அழைக்கின்றார்கள். இப்படிப்பட்ட முருகனின் கோலங்கள் பண்டைக் கால முருகனின் ஆலயங்களில் மூலவருக்கு முன்னால் காணப்பட்டது. திருத்தணி, ஸ்வாமி மலை மற்றும் உத்திரமேரூர் போன்ற ஆலயங்கள் அவற்றில் சில. கந்த புராணத்தின்படி இந்திரனின் வாகனமான யானை முருகனுக்கும் வாகனமாக இருந்துள்ளது. முருகன் யுத்தங்களுக்குப் போனாலும், பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்றாலும் பிணி முகம் என்று அழைக்கப்பட்ட ஒரு யானை மீதுதான் ஏறிச் செல்வாராம். அருணகிரிநாதர் திருப்புகழில் சிதம்பரத்தில் உள்ள முருகனைப் போற்றி ''உன்றன்டுக் சிந்தை சந்தோஷித் தழு கொண்டருள வந்து சிண்டுரத் -தெரி (சிந்துரம் யானை )'' எனப் பாடி உள்ளார் . குமார தந்திரத்தில் இந்த தோற்றத்தில் உள்ள முருகனுக்கு ஒரு முகமும், நான்கு கைகளும் உள்ளதாகக் கூறி உள்ளது. சக்தி வேல் மற்றும் சேவலை இரு கைகள் பிடித்திருக்க, மற்ற இரண்டிலும், அபய மற்றும் வரத முத்திரைகள் காணப்படுகின்றன. இன்னொரு குறிப்பில் அவர் வலது கைகளில் கையில் வேல் மற்றும் வாள் இருக்க இரு இடது கைகளிலும் சேவல் கொடி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. சிதம்பர ஆலயத்தின் கிழக்கு நுழை வாயிலில் கஜருதர் உருவத்தில் உள்ள முருகன் காணப்படுகிறார். இந்த கடவுளையும் அருணகிரிநாதர் தகுந்த வார்த்தைகளால் போற்றி உள்ளார். 35
  9. கும்பகோணம்: கார்த்திகேயா
    இந்தப் பெயர் வட நாட்டில் பிரசித்தமானது. முருகனை கிருத்திகை மகளினர் எடுத்து வளர்த்ததினால் அவர் கார்த்திகேயர் என்ற பெயரைப் பெற்றார். குமார தந்திராவில் கார்திகேயருக்கு ஆறு முகங்களும், ஆறு கைகளும் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளது. இரண்டு கைகள் அபாய, வராத முத்திரைகளைக் காட்டிக் கொண்டு இருக்க மற்றக் கைகளில் சக்தி, வாள், வஜ்ராயுதம் மற்றும் கேடயம் போன்றவை உள்ளன. அவர் காலை சூரியனைப் போல ஜொலிப்பவர். தணிகைப் புராணத்திலும் கார்திகேயரின் உருவம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த கோலத்தில் உள்ள முருகனுக்கு ஆறு முகங்கள் மற்றும் ஆறு கைகள் உண்டு. இடது கை ஒன்றில் வரத முத்திரை மற்ற இரண்டில் வஜ்ராயுதம் மற்றும் கேடயம் இருக்க, வலது கை ஒன்றில் அபய முத்திரை மற்றும் மற்ற இரண்டில் சக்தி வேல் மற்றும் செங்கோல் உள்ளது. இந்த கோலத்தில் உள்ளவரை வழிபட்டால் நோய்கள் விலகுமாம். கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகேயர் ஆறு முகங்களுடனும், ஆறு கைகளுடனும் காணப்படுகிறார்36 அவருடைய நான்கு கரங்களில் ஜெப மாலை, வாள், வஜ்ராயுதம் மற்றும் கேடயம் இருக்க வலது கையில் அபய முத்திரைக் காணப்பட இடது கை இடுப்பின் மீது வைத்துக் கொண்டுள்ள நிலையில் உள்ளது.
  10. உத்திரமேரூர்: தாரகி
    சூரபத்மனின் இளைய சகோதரர் தாரகாசுரன். அவன் தனது மாய சக்தியினால் எதிர்ப் படையினரை அவர்கள் மூழ்குவது போன்ற தோற்றத்தை அவர்கள் மனதில் கொடுத்தான். முருகனின் தேவர்களின் படையில் இருந்த நவ வீரர்கள் அவன் இருந்த மலைப் பிரதேசத்தில் நுழைந்தவுடன் அவர்களை மயக்கி அவர்களையும் நினைவு இழக்கச் செய்தான் அந்த அசுரன். அதைக் கேட்டறிந்த முருகன் உடனே சற்றும் தயங்காமல் தன்னுடைய ஞான வேலினை ஏவி தாரகாசூரனை ஒரேடியாக அழித்தார். அதை ''கேருக்கு பேயரிய குன்றம் கொன்றான் முருகன்'' எனக் குறிப்பிட்டார்கள். குறுக்கு என்றால் கொக்கு என்று பொருள். இந்த கோலத்தில் உள்ள முருகனுக்கு ஆறு முகங்களும்,பன்னிரண்டு கைகளும் உள்ளதாக குமார தந்திராவில் கூறி உள்ளார்கள். இடது கை ஒன்றில் வரத முத்திரை இருக்க மற்றவற்றில் வஜ்ராயுதம், அம்பு, கேடயம், கொடி ( செடியில் உள்ள கொடியைப் போன்றது) மற்றும் தெய்வ உருவம் இருக்க, வலது ஒரு கையில் அபய முத்திரை மற்றவற்றில் சக்தி, உலக்கை, கயிறு மற்றும் செங்கோல் போன்றவை உள்ளன. இந்த தாரகாரி உருவம் விராலிமலை மூலஸ்தானத்தில் உள்ளது. தணிகைப் புராணமும் குமார தந்திராவில் கூறப்பட்டு உள்ள உருவையே ஆமோதித்துள்ளது. இந்த உருவம் செங்கல்பட்டில் உள்ள உத்திரமேரூர் முருகன் ஆலயத்தில் உள்ளது 37
  11. திருப்போரூர் தேசிக சுப்பிரமணியர்
    இங்குள்ளவர் சிவகுருவின் தோற்றத்தில் உள்ளார்., சிவன் ஒரு ஆல மரத்தடியில் அமர்ந்து இருக்க சனகன், சனாதனன், சாந்தகுமாரன் மற்றும் சனந்தனன் போன்ற முனிவர்களுக்கு அவர் உபதேசம் செய்வது போல உள்ளது. இங்குள்ள சிவனுக்கு முருகனே உபதேசம் செய்ய அதைக் கொண்டே சிவன் மற்ற முனிவர்களுக்கு உபதேசம் செய்தாராம். ஆகவே இங்குள்ள முருகனை ஞான தேசிகர் என்கிறார்கள். தேசிக சுப்ரமணியருக்கு ஒரு முகமும் ஆறு கைகளும் உள்ளன. இரண்டு கைகளால் அவர் சக்தி வேலைப் பிடித்திருக்க மற்ற கைகளில் சின்ன, அபய, வரத முத்திரைகள் காணப்பட, நான்காவதில் ருத்ராக்ஷ மாலையை வைத்துக் கொண்டு உள்ளார். அவர் எதிரில் மாணவரைப் போல நின்று கொண்டுள்ள சிவபெருமான் அவரிடம் இருந்து பிரணவ மந்திரத்தின் உபதேசத்தைப் பெறுகிறார். மன கார புத்தகத்தில் வேறு ஒரு கோலத்தில் இதைக் காட்டி உள்ளார்கள். தேசிக சுப்பிரமணிய சிவன் தனது இடது கையை இதயத்தின் மீது வைத்துக் கொண்டும் , வலது கையால் வாயை பொத்திக் கொண்டும், ஒரு குருவின் முன்னால் அடங்கி நிற்கும் மாணவரைப் போல முருகன் முன்னால் நின்றிருக்க, அதில் உள்ள சிவபெருமானின் இரண்டு கைகளில் ஒன்றில் உடுக்கையும், மற்றதில் கலை மான் ஒன்றையும் பிடித்துக் கொண்டு உள்ளார். அவருக்கு இடப்புறத்தில் பார்வதி அமர்ந்திருக்கின்றாள். அவர் தலையில் உள்ள சந்திரன் ஜொலிக்கின்றது . மகனிடம் இருந்து உபதேசம் பெறும் இந்தக் காட்சியில் உள்ள உருவ அமைப்பு புதுமையானது. திருப்போரூரில் உள்ள பித்தளையிலான ஒரு சிலை அற்புதமாக உள்ளது 38 அதில் சிவபெருமானின் இடது தொடையில் முருகன் அமர்ந்து இருக்க சிவபெருமானின் இடது கால் சற்றே மடிந்து பூமியைத் தொட்டிருக்க அவருடைய வலது கால் ஒரு பீததின் மீது வைக்கப்பட்டு உள்ளது. அதில் சிவபெருமான் தனது ஒரு கையினால் முருகனைக் கட்டிக் கொண்டு காட்சி தருகிறார். அவருடைய இன்னொரு கை கலை மானை பிடித்துக் கொண்டு உள்ளது. மற்ற இரு கைகளில் ஒன்று கோடாரியை பிடித்துக் கொண்டிருக்க மற்றதினால் வாயை மூடிக் கொண்டுள்ளார். இந்த மாதிரியான புதுமையான குரு உபதேச சிலை கடவுட்களுக்கே கூடக் காணக் கிடைக்காதது. அவரைத் தவிர பிரும்மா, அகஸ்தியர், விஷ்ணு, இந்திரன், சப்த ரிஷிகள் மற்றும் சனகர் போன்ற நான்கு ரிஷிகளுக்கும் முருகன் உபதேசம் செய்துள்ளார் என்பதை அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் அறியலாம்.
  12. அஜாருத்தர் (ஆட்டு வாஹனர்)
    இந்தக் காட்சியில் உள்ள முருகன் ஒரு தமது வாஹனம் போல ஒரு செம்மறியாட்டின் மீது அமர்ந்துள்ளார். அதன் கதை என்ன என்றால், அந்த ஆடு நாரதர் நடத்திய யாகத்தில் ஹோம குண்டத்தில் இருந்து வெளியாகி அங்கிருந்தவற்றை நாசம் செய்யத் துவங்கியது. தேவர்கள் முருகனிடம் சென்று அதைப் பற்றி முறையிட அவர் தனது படையினரான வீரபாகுவை அனுப்பி அதைப் பிடித்து வரச் செய்தார். வீரபாகு அதைக் கொண்டு வந்ததும், அதை தனது வாகனமாக மாற்றிக் கொண்டு அதன் மீது முருகன் அமர்ந்து கொண்டார். கந்தர் கலி வெண்பாவில் இதைப் பற்றி ஒரு பத்தி செய்தி உள்ளது. இந்த அபூர்வ தோற்றத்திலான அஜாருத்தர் சிலையை திருப்போரூரில் உள்ள கந்தர் ஸ்வாமி ஆலயத்தில் காணலாம்.
  13. (c) கும்பமுனி கும்பிடும் : தம்பிரான்
    முருகனிடம் இருந்து நேரடியாக உபதேசம் பெற்றவர்கள் மூவர். அவர்கள் சிவபெருமான், அகஸ்தியர் மற்றும் அருணகிரிநாதர் போன்றவர்கள். முருகன் தனக்கு தமிழில் இயல், இசை மற்றும் நாடகம் என்ற மூன்றையும் ஒரு ஆசிரியராக இருந்து உபதேசித்தார் என்று கூறி உள்ளார். திருப்போரூர் கந்தசாமி ஆலயத் தூண் ஒன்றில் இந்தக் காட்சி உள்ளது. 40
  14. திருவிடக் -கலி: (வில்லாண்டியவேலன்)
    முருகன் தனது தாய் மாமனான விஷ்ணுவைப் போலவே வில் கோதண்டத்துடன் காணப்படுவதைக் குறித்து பாடிய அருணகிரிநாதர் அதை வெங்கோப கோதண்டம் கூறி உள்ளார் (திருப்புகழ் பாடல் வரி 1107). திருப்புகழில் திரிச்செந்தூரைக் குறித்தப் பாடலில் கோதண்டத்தைக் குறித்து இப்படியாக எழுதப்பட்டு உள்ளது '' ஓ, முருகா, நான்கு கைகளிலும் திரிச்சூலம், கைத்தடி, சேவல், கோதண்டம் போன்றவற்றை ஏந்தியும், கால்களில் சலங்கையும், விரிந்த மார்புடன் மயில் மீது அமர்த்தும் உள்ள நிலையில் எனக்குக் காட்சி தர வேண்டும்''. வில்லுடன் உள்ள முருகனை சம்ஹார மூர்த்தி என்பார்கள். சூரபத்மனின் மகனான ஹிரன்யாசுரனைக் கொன்ற போது முருகன் கொண்ட கோலத்தையே ஹிரன்யாசுர சம்ஹார மூர்த்தி என்பார்கள். இந்தக் கோலத்தை திருக்கடையூரின் அருகில் உள்ள திருவிடைகளையில் காணலாம்41 சில ஸ்தலங்களில் இந்த கோலத்தில் உள்ள சம்ஹார மூர்த்தி தனது இரு மனைவிகளுடன் காட்சி தர , சில ஸ்தலங்களில் தனியாகவே உள்ளார். பஞ்சலோக சிலைகளில் உள்ள இந்தக் கோலத்தில் இடது கையில் வில்லைப் பிடித்து உள்ள முருகனின் இடது கால் மயில் மீது காணப்படுகிறது. முன்பக்க வலது கையில் அம்பு இருக்க இடது கையில் வில் உள்ளது. மற்ற இரண்டு கைகளில் ஒன்றில் சக்தி வேல் மற்றதில் வஜ்ராயுதம் உள்ளது. இப்படிப்பட்ட சிலைகளை திருப்போஆரூர், திருவெண்காடு, சேயூர், சிவபுரம் மற்றும் ஸ்ரீ முஷ்ணம் போன்ற இடங்களில் உள்ள ஆலயங்களில் காணலாம்.
  15. வழுவூர்: பரிவுடன் கௌரி கொஞ்சும் பாலன்
    பார்வதி தன்னுடைய மகனை வலது கையினால் தன் மீது அணைத்து அவரை தடவிக் கொடுக்கும் கோலத்தில் உள்ளது அபூர்வமான காட்சி. அந்த பித்தளை சிலை கண்களைக் கவரும். அந்த கோலத்தில் உள்ள அம்பிகையை குகாம்பிகை என்பார்கள். இது வழுவூரில் உள்ளது.42 அதே போன்ற அற்புதமான கஜ சம்ஹாரன், பிக்ஷாதானர், மோகினி போன்றவையும் மயிலாடுதுறையில் இருந்து மன்கானலூருக்குச் செல்லும் வழியில் உள்ள வழுவூரில் உள்ளது. அருணகிரிநாதரின் கீழ் கண்ட பாடலைப் பார்க்கவும்.
    அதி சங்கனர் பக மறுமை
    கோல அம்பிகை மாதா மனோமணி
    அதி சுந்தரி தாயான நாரணி அபிராமி
    அவள் கொண்டு விரலே சீராட்டவே
    (போடகன்டறு ... திருவாவினன்குடி திருப்புகழ் )]
  16. கழுகுமலை : கழுகு மலையில் அழகு மயில்
    திருநெல்வேலிக்கு அருகில் உள்ள குழுகு மலைக்குச் சென்று அங்குள்ள முருகனை தரிசிக்க வேண்டும். அங்குள்ளவருக்கு ஒரு முகம், ஆறு கைகள் உண்டு. மயில் மீது அமர்ந்து உள்ள அவரை மயில் தன்னுடைய தலையைத் திருப்பிப் பார்த்தபடி உள்ளது43 ஆறு கைகளில் இரண்டில் அபய மற்றும் வரத முத்திரைகள் காணப்பட, மற்ற நான்கில் சக்தி வேல், வாள், கேடயம் மற்றும் வஜ்ராயுதம் போன்றவை உள்ளன. அருணகிரிநாதர் கழுகுமலைக் குறித்து இப்படியாகப் பாடி உள்ளார்: "வேண்டும் அடியார் புலவர் வேண்ட அரியபொருளை
    வேண்டும் அளவில் உதவும் கழுகுமலை வள்ளல் "

    Bibliography

    1. Chengalvaraya Pillai, Dr.V.S.C. Murukanvēl Panniru Tirumurai, (Madras: Meenakshi Kalyana Sundaram) 1954.
    2. R. Ramaseshan, Dr. R. and Krishnan, R. Arunakirinātar Ati Cuvattil. (Swamimalai Tirukkovil) 1981.
    3. Narayanaswami, V. Tamilaka Arputa Alayankal (Madras: Narmata Pattippakam) 1989.
    4. Ten Intiya Tamil Cācanankal. Caiva Sittānta (Madras: Nūr Pattippuk Kalakam) 1967.
    5. Tirunallūr Tala Purānam. (Tiruvavaduthurai Adheenam) 1971.
    6. Ramasesnan, Dr.R. and Krishnan, Ra. Mulukum Alakiya Kumaran (Madras: Tiruppukal Pattippakam) 1987.
    7. Krishnan, Ra. Varam Arulam Ciruvai Murukan (Chennai: Ciruvacirc;puri Murukan Abhisheka Committee) 1994
    8. Murukavēl Panniru Tirumurai published by Meenakshi Kalyana Sundaram in 1952. * Both Tanikaimani and Kirupānanda Variyar editions
      * Saiva Siddhanta Mahā Samajam 1935 edition.

    End Notes

    1. Murukanvēl Panniru Tirumurai, Vol. IV p. 258
    2. Arunakirinātar Aticcuvattil, p. 560
    3. Murukanvēl Panniru Tirumurai, Vol. IV p. 772
    4. Arunakirinātar Aticcuvattil, p. 562
    5. Arunakirinātar Aticcuvattil, p. 84
    6. Tirukkaluk Kunra Talapurānam, Chapter 22
    7. Tamilaka Arputa Alayankal
    8. Arunakirinātar Aticcuvattil, p. 83
    9. Murukanvēl Panniru Tirumurai, p. 44.
    10. Ten Intiya Tamil Cācanankal, pp. 21-30.
    11. Murukanvēl Panniru Tirumurai, Vol IV p. 622.
    12. Arunakirinātar Aticcuvattil, p. 157.
    13. Tirunallūr Tala Purānam, Chap 25.
    14. Murukanvēl Panniru Tirumurai, Vol IV p. 282.
    15. Murukanvēl Panniru Tirumurai, Vol IV p. 280.
    16. Murukanvēl Panniru Tirumurai, Vol IV p. 774.
    17. Arunakirinātar Aticcuvattil, p. 420.
    18. Murukanvēl Panniru Tirumurai, Vol II p. 496.
    19. Arunakirinātar Aticcuvattil, p. 200. and interview with Śrī Kushma Cettiar, Natarajan and Palani Cuvāmi of Cinna Tadagam.
    20. Arunakirinātar Aticcuvattil, p. 81.
    21. Arunakirinātar Aticcuvattil, p. 110.
    22. Arunakirinātar Aticcuvattil, p. 112.
    23. Arunakirinātar Aticcuvattil, p. 114.
    24. Arunakirinātar Aticcuvattil, p. 321.
    25. Arunakirinātar Aticcuvattil, p. 76.
    26. Dinamani Kathir supplement, 29 November 1998, pp. 22-23.
    27. Mulutum Alakiya Kumaran, p. 88.
    28. Mulutum Alakiya Kumaran, p. 55.
    29. Varam Arulum Murukan, p. 12.
    30. Mulutum Alakiya Kumaran, p. 51.
    31. Mulutum Alakiya Kumaran, p. 62.
    32. Mulutum Alakiya Kumaran, p. 63.
    33. Mulutum Alakiya Kumaran, p. 37.
    34. Mulutum Alakiya Kumaran, p. 40.
    35. Mulutum Alakiya Kumaran, p. 44.
    36. Mulutum Alakiya Kumaran, p. 51.
    37. Mulutum Alakiya Kumaran, p. 65.
    38. Mulutum Alakiya Kumaran, p. 71.
    39. Mulutum Alakiya Kumaran, p. 81.
    40. Mulutum Alakiya Kumaran, p. 66.
    41. Mulutum Alakiya Kumaran, p. 83.
    42. Mulutum Alakiya Kumaran, p. 86.
    43. Mulutum Alakiya Kumaran, p. 70.

    Valayapettai Ra. Krishnan is a prominent Muruka devotee and scholar in the Chennai area having a large number of Tamil publications to his credit. He has also produced many audio cassettes, musical discourses and lecture demonstrations. His spouse T.V. Sundaravalli is a renowned vocal recording artiste specialising in Tiruppukazh and Muruga bhakti songs.
    Valayapettai Ra. Krishnan
    52, Muthaiah Mudali II Street
    Rayapettai Chennai 600 014 India
    E-mail: s_sundaram@vsnl.net
    Telephone: (091) 44 847-4468

Tuesday 11 December 2012

ஞானமலை

ஞானமலை மேவு பெருமானே!

பார்க்கும் இடமெல்லாம் ஞானமயம். ஞான விநாயகர், ஞான மலை, ஞானபண்டிதப் பெருமான் முருகன்... வழிபடுவோர்க்கு ஞானமும் செல்வமும் வாரி வழங்கும் இந்தத் தலம் - ஞானமலை. வேலூர் மாவட்டத்தில் உள்ளது இம்மலை. ஞான வடிவின
பார்க்கும் இடமெல்லாம் ஞானமயம். ஞான விநாயகர், ஞான மலை, ஞானபண்டிதப் பெருமான் முருகன்... வழிபடுவோர்க்கு ஞானமும் செல்வமும் வாரி வழங்கும் இந்தத் தலம் - ஞானமலை. வேலூர் மாவட்டத்தில் உள்ளது இம்மலை. ஞான வடிவினனாய் முருகன் குடிகொண்ட குன்றம் இது.
வள்ளிமலையில் இருந்து குற வள்ளியை அழைத்துக் கொண்டு திருத்தணிக்குச் சென்ற முருகப் பெருமான், சற்று நேரம் இளைப்பாற எண்ணினார். அப்போது கண்ணில் பட்டது சிறிய குன்று. இருவரும் அந்தக் குன்றில் தங்கி இளைப்பாறினர். பின்னர் திருத்தணிக்குச் சென்றனர். ஞான மலை மீது முருகனின் திருவடிகள் பதிந்த பாதச் சுவடுகளைக் காட்டுகிறார்கள் பக்தர்கள். இங்கிருந்து திருத்தணியும் வள்ளிமலையும் சமமான தொலைவில் முக்கோண வடிவில் அமைந்திருப்பது சிறப்பு.
அருணகிரிநாதருக்கு, தனது பாத தரிசனத்தை முருகன் காட்டி அருளிய தலமும் இந்த ஞானமலை திருத்தலம்தான். இங்கே எழுந்தருளியுள்ள முருகனைப் போற்றி இரண்டு திருப்புகழ் பாடியுள்ளார் அருணகிரிநாதர். அதில் ஒரு பாடலில்,
நாதரிட மேவு மாதுசிவ காமி நாரிஅபி ராமி அருள்பாலா நாரண சுவாமி ஈனுமக ளோடு ஞானமலை மேவு பெருமாளே - என்கிறார்.
மலையின் அடிவாரத்தில் இறங்கியதும் படியேறிச் செல்லும்போது ஞானஸித்தி விநாயகர் சந்நிதியைக் காணலாம். ஞானமே உருவாக, ஓம் எனும் பிரணவப் பொருளாய் அமர்ந்திருக்கும் விநாயகரை தரிசிக்கலாம். மலைக்குச் செல்ல படிக்கட்டுகள் மற்றும் நிழற்கூரைகள் உள்ளன. வழியில் வெப்பாலை, குடசப்பாலை மரங்கள் நிறைய காணப்படுகின்றன. இயற்கை அழகு கொஞ்சும் மலையில் ஏறி மேலே சென்றால் முருகப் பெருமானின் சந்நிதி. சந்நிதியை வலம் வரும்போது, மலையின் இடது புறம், ஒரு சுனை காணப்படுகிறது. 14-ஆம் நூற்றாண்டில் காளிங்கராயன் என்பவன், ஞானமலை கோயிலுக்கு படிகள் அமைத்த செய்தியைச் சொல்கிறது அங்குள்ள ஒரு கல்வெட்டு.
முருகன் சந்நிதிக்குப் பின்னே, மலை மீது சற்று ஏறிச் சென்றால், அங்கே சிவபெருமான் சந்நிதி. இவரை ஞானகிரீஸ்வரர் என்கின்றனர். இந்த சந்நிதிக்குப் பின்னே, மலையில் முருகன் பாதம் பதிந்த தடங்கள் என இரு பாதச்சுவடுகளைக் காட்டுகிறார்கள். அந்த அமைப்பை சிறு மண்டபம் கட்டி, அதனுள் பாதுகாத்து வைத்துள்ளனர்.
வலம் வந்தபின் முருகனின் சந்நிதியை தரிசிக்கலாம். இங்கே, ஸ்ரீமுருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பேரழகுடன் காட்சி தருகிறார். ஞானமலை முருகனின் திருமுகம் ஞானக்களையுடன் திகழும் அழகே அழகு. இதனை பிரம்ம சாஸ்தா வடிவம் என்கின்றனர். பல்லவர்கள் எழுப்பிய ஆலயங்களில், பெரும்பாலும் முருகப் பெருமான், பிரம்ம சாஸ்தா வடிவில்தான் இருப்பாராம். ஜபமாலை ஒரு கையிலும் கமண்டலம் ஒரு கையிலுமாகக் கொண்டு, முன் கைகள் இரண்டில் ஒன்று அபய ஹஸ்தமாகவும் ஒன்றை இடுப்பிலும் வைத்தபடி காட்சி தருகிறார். உற்ஸவர், கோலக் குறமகள் தழுவிய ஞானக் குமரனாக, வள்ளியைத் தன் மடியில் இருத்தி, அணைத்தபடி காட்சி தருகிறார்.
உள்ளூர் மற்றும் வெளியூர் அன்பர்களின் துணையுடன், இக்கோயிலில் உற்ஸவங்கள் நடக்கின்றன.
கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதலான விழாக்கள் இங்கே விமரிசையாக நடைபெறுகின்றன. அருணகிரிநாதருக்கு முருகன் தரிசனம் தந்த விழா, கார்த்திகை மாதத்தில் சீரும் சிறப்புமாக நடக்கிறது. கல்வி கேள்விகளில் சிறக்க பிரம்மசாஸ்தா வடிவமாகத் திகழும் ஞானமலை முருகனை தரிசிப்போம்.
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில், சுமார் 16 கி.மீ. தொலைவில் மங்கலம் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து ஞானமலை பெயரைத் தாங்கியுள்ள வளைவின் வழியாக சுமார் 2 கி.மீ. தொலைவு பயணித்தால் ஞானமலை அடிவாரத்தை அடையலாம்.
தரிசனத் தொடர்புக்கு: கே.மணி
(அர்ச்சகர்) 04177-292411  9445207242