Wednesday 10 March 2010

பாரதியார் ஆத்திச்சூடி

பாரதியார் ஆத்திச்சூடி

காப்பு - பரம்பொருள் வாழ்த்து
ஆத்திச்சூடி , இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும்மெழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் த ந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

1. அச்சம் தவிர்
2. ஆண்மை தவறேல்
3. இளைத்தல் இகழ்ச்சி
4. ஈகை திறன்
5. உடலினை உறுதிசெய்
6. ஊண் மிக விரும்பு
7. எண்ணுவது உயர்வு
8. ஏறுபோல் நட
9. ஐம்பொறி ஆட்சிகொள்
10. ஒற்றுமை வலிமையாம்
11. ஓய்தல் ஒழி
12. ஔடதம் குறை
13. கற்றது ஒழுகு
14. காலம் அழியேல்
15. கிளைபல தாங்கேல்
16. கீழோர்க்கு அஞ்சேல்
17. குன்றென நிமிர்ந்து நில்
18. கூடித் தொழில் செய்
19. கெடுப்பது சோர்வு
20. கேட்டிலும் துணிந்து நில்
21. கைத்தொழில் போற்று
22. கொடுமையை எதிர்த்து நில்
23. கோல்கைக் கொண்டு வாழ்
24. கல்வியதை விடேல்
25. சரித்திரத் தேர்ச்சிகொள்
26. சாவதற்கு அஞ்சேல்
27. சிதையா நெஞ்சு கொள்
28. சீறுவோர்ச் சீறு
29. சுமையினுக்கு இளைத்திடேல்
30. சூரரைப் போற்று
31. செய்வது துணிந்து செய்
32. சேர்க்கை அழியேல்
33. சைகையில் பொருளுணர்
34. சொல்வது தெளிந்து சொல்
35. சோதிடந்தனை இகழ்
36. சௌரியம் தவ§Èல்
37. ஞமலிபோல் வாழேல்
38. »¡Â¢Ú §À¡üÚ
39. ஞிமிரென இன்புறு
40. ஞெகிழ்வது அருளின்
41. ஞேயம் காத்தல் செய்
42. தன்மை இழவேல்
43. தாழ்ந்து நடவேல்
44. திருவினை வென்று வாழ்
45. தீயோர்க்கு அஞ்சேல்
46. துன்பம் மறந்திடு
47. தூற்றுதல் ஒழி
48. தெய்வம் நீ என்று உணர்
49. தேசத்தைக் காத்தல் செய்
50. தையலை உயர்வு செய்
51. தொன்மைக்கு அஞ்சேல்
52. தோல்வியில் கலங்கேல்
53. தவத்தினை நிதம்புரி
54. நன்று கருது
55. நாளெல்லாம் வினை செய்
56. நினைப்பது முடியும்
57. நீதிநூல் பயில்
58. நுனியளவு செல்
59. நூலினைப் பகுந்துணர்
60. நெற்றி சுருக்கிடேல்
61. நேர்ப்படப் பேசு
62. நையப் புடை
63. நொந்தது சாகும்
64. நோற்பது கைவிடேல்
65. பணத்தினை பெருக்கு
66. பாட்டினில் அன்பு செய்
67. பிணத்தினைப் போற்றேல்
68. பீழைக்கு இடம் கொடேல்
69. புதியன விரும்பு
70. பூமி இழந்திடேல்
71. பெரிதினும் பெரிது கொள்
72. பேய்களுக்கு அஞ்சேல்
73. பொய்ம்மை இகழ்
74. போர்த்தொழில் பழகு
75. மந்திரம் வலிமை
76. மானம் போற்று
77. மிடிமையில் அழிந்திடேல்
78. மீளுமாறு உணர்ந்து கொள்
79. முனையிலே முகத்து நில்
80. மூப்பினுக்கு இடங்கொடேல்
81. மெல்லத் தெரிந்து சொல்
82. மேழி போற்று
83. மொய்ம்புறத் தவம் செய்
84. மோனம் போற்று
85. மௌட்டியந்தனைக் கொல்
86. யவனர்போல் முயற்சிகொள்
87. யாவரையும் மதித்து வாழ்
88. யௌவனம் காத்தல் செய்
89. ரஸத்திலே தேர்ச்சி கொள்
90. ராஜஸம் பயில்
91. ரீதி தவறேல்
92. ருசிபல வென்றுணர்
93. ரூபம் செம்மை செய்
94. ரேகையில் கனிகொள்
95. ரோதனம் தவிர்
96. ரௌத்திரம் பழகு
97. லவம்பல வெள்ளமாம்
98. லாவகம் பயிற்சி செய்
99. லீலை இவ்வுலகு
100. உறுத்தரை இகழ்
101. உலோக நூல் கற்றுணர்
102. லௌகிகம் ஆற்று
103. வருவதை மகிழ்ந்துண்
104. வானநூல் பயிற்சிகொள்ள
105. விதையினைத் தெரிந்திடு
106. வீரியம் பெருக்கு
107. வெடிப்புறப் பேசு
108. வேதம் புதுமை செய்
109. வையத் தலைமைகொள்
110.வௌவுதல் நீக்கு

பாரதிதாசன் ஆத்திச்சூடி

பாரதிதாசன் ஆத்திச்சூடி

1. அனைவரும் உறவினர்
2. ஆட்சியைப் பொதுமைசெய்
3. இசைமொழி மேலதே
4. ஈதல் இன்பம்
5. உடைமை பொதுவே
6. ஊன்றுளம் ஊறும்
7. எழுது புதிய நூல்
8. ஏடு பெருக்கு
9. ஐந்தொழிற்கு இறை நீ
10. ஒற்றுமை அமைதி
11. ஓவியம் பயில்
12. ஔவியம் பெருநோய்
13. கல்லார் நலிவர்
14. காற்றினைத் தூய்மைசெய்
15. கிழிப்பொறி பெருக்கு
16. கீழ்மகன் உயர்வெனும்
17. குள்ள நினைவுதீர்
18. கூன்நடை பயிலேல்
19. கெடு நினைவு அகற்று
20. கேட்டு விடையிறு
21. கைம்மை அகற்று
22. கொடுத்தோன் பறித்தோன்
23. கோனாட்சி வீழ்த்து
24. சதுர்பிறர்க்கு உழைத்தல்
25. சாதல் இறுதி
26. சிறார் நலம்தேடு
27. சீர்பெறல் செயலால்
28. சுவைஉணர் திறங்கொள்
29. சூழ்நிலை நோக்கு
30. செல்வம் நுண்ணறிவாம்
31. சேய்மை மாற்று
32. சைகையோடு ஆடல் சேர்
33. சொற்பெருக்கு ஆற்றல் கொள்
34. சோர்வு நீக்கு
35. தளையினைக் களைந்து வாழ்
36. தாழ்வு அடிமை நிலை
37. திருஎனல் உழுபயன்
38. தீங்கனி வகைவிளை
39. துன்பம் இன்பத்தின் வேர்
40. தூய நீராடு
41. தெருவெல்லாம் மரம் வளர்
42. தேன்எனப் பாடு
43. தைக்க இனிது உரை
44. தொன்மை மாற்று
45. தோல்வி ஊக்கம்தரும்
46. நடுங்கல் அறியாமை
47. நால்வகைப் பிறவிபொய்
48. நினைவினில் தெளிவுகொள்
49. நீணிலம் உன் இல்லம்
50. நுண்ணிதின் உண்மை தேர்
51. நூலும் புளுகும்
52. நெடுவான் உலவு
53. நேர்பயில் ஆழ்கடல்
54. நைந்தார்க்கு உதவிசெய்
55. நொடிதோÚம் புதுமைசேர்
56. நோய் தீயொழுக்கம்
57. பல்கலை நிறுவு
58. பார்ப்பு பொதுப்பகை
59. பிஞ்சு பழாது
60. பீடு தன்மானம்
61. புதுச்சுவை உணவுகாண்
62. பூப்பின் மணங்கொள்
63. பெண்ணோடு ஆண்நிகர்
64. பேயிலை மதலால்
65. பைந்தமிழ் முதல்மொழி
66. பொழுதென இரவுகாண்
67. போர்த்தொழில் பழகு
68. மறைஎனல் சூழ்ச்சி
69. மாறுவது இயற்கை
70. மிதியடியோடு நட
71. மீச்செலவு தவிர்
72. முகச்சரக்காய் வாழ்
73. மூப்பினுக்கு இடம்கொடேல்
74. மெய்கழிவு அயற்கின்னா
75. மேலை உன்பெயர் பொறி
76. மையம் பாய்தல் தீர்
77. மொடுமாற்றுப் பொது இன்னா
78. மோத்தலில் கூர்மை கொள்
79. வறுமை ஏமாப்பு
80. வாழாட்கு வாழ்வு சேர்
81. விடுதலை உயிக்குயிர்
82. வீடு எனல் சாதல்
83. வெறும் பேச்சு பேசேல்
84. வேளையோடு ஆர உண்
85. வையம் வாழ வாழ்

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து

அன்னை மொழியே

அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை

முகிழ்த்த நறுங்கனியே!



கன்னிக் குமரிக்

கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த

மண்ணுலகப் பேரரசே!



தென்னன் மகளே!

திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே!

எண்தொகையே ! நற்கணக்கே!



மன்னுஞ் சிலம்பே!

மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால்

முடிதாழ வாழ்த்துவமே



மன்னுஞ் சிலம்பே!

மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால்

முடிதாழ வாழ்த்துவமே



சிந்தா மணிச்சுடரே!

செங்கை செறிவளையே!

தந்த வடமொழிக்கும்

தாயாகி நின்றவளே!



சிந்து மணற்பரப்பில்

சிற்றில் விளையாடி

முந்தை எகுபதியர்

மூத்த சுமேரியத்தார்
செந்திரு நாவில்

சிரித்த இளங்கன்னீ !

சிந்துங் கலைவடிவே !

சீர்த்த கடற்கோளில்



நந்தாக் கதிரொளியே!

நாடகத்துப் பண்ணியலே !

வந்த குடிமரபோர்

வாழ்த்தி வணங்குவமே



- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

கந்தர் சஷ்டிக் கவசம்

கந்தர் சஷ்டிக் கவசம்

காப்பு

நேரிசை வெண்பா



துதிப்போர்க்கு வல்வினைபோம்
துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம்
பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும்
நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசந் தனை.

குறள் வெண்பா


அமரரிடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி

நூல்
நிலைமண்டில ஆசிரியப்பா


சஷ்டியை நோக்கச்
சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவுஞ்
செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில்
பன்மணிச் சதங்கை
கீதம் பாடக்
கிண்கிணி யாட
மையல் நடனஞ் செய்யும்
மயில்வா கனனார்
கையில்வே லால் எனைக்
காக்கவென்று உவந்து
வரவர வேலா
யுதனார் வருக
வருக வருக
மயிலோன் வருக
இந்திரன் முதலா
எண்திசை போற்ற
மந்திர வடிவேல்
வருக வருக
வாசவன் மருகா
வருக வருக
நேசக் குறமகள்
நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த
ஐயா வருக
நீறிடும் வேலவன்
நித்தம் வருக
சிரகிரி வேலவன்
சீக்கிரம் வருக
சரஹண பவனார்
சடுதியில் வருக
சரஹண பவச
ரரரர ரரர
ரிஹண பவச
ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண
வீரா நமோ நம
நிபவ சரஹண
நிறநிற நிறென
வசர ஹணப
வருக வருக
அசுரர் குடி கெடுத்த
ஐயா வருக
என்னை யாளும்
இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம்
பாசாங் குசமும்
பரந்த விழிகள்
பன்னிரண்டும் இலங்க
விரைந்தெனைக் காக்க
வேலோன் வருக
ஐயுங் கிலியும்
அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும்
உயிரையுங் கிலியும்
கிலியுஞ் சௌவும்
கிளரொளி ஐயும்
நிலைபெற்று என்முன்
நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும்
தனியொளி யொவ்வும்
குண்டளி யாம்சிவ
குகன் தினம் வருக
ஆறு முகமும்
அணிமுடி யாறும்
நீறிடு நெற்றியும்
நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும்
பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில்
நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில்
இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத்து
அழகிய மார்பில்
பல்பூ ஷணமும்
பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட
நவரத்ன மாலையும்
முப்புரி நூலும்
முத்தணி மார்பும்
செப்புழ குடைய
திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில்
சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த
நற்சீ ராவும்
இருதொடை அழகும்
இணைமுழந் தாளும்
திருவடி யதனில்
சிலம்பொலி முழங்க
செககண செககண
செககண செகண
மொகமொக மொகமொக
மொகமொக மொகண
நகநக நகநக
நகநக நகென
டிகுகுண டிகுடிகு
டிகுகுண டிகுண
ரரரர ரரரர
ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி
ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு
டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு
டங்கு டிங்குகு
விந்து விந்து
மயிலோன் விந்து
முந்து முந்து
முருகவேள் முந்து
எந்தனை ஆளும்
ஏரகச் செல்வ!
மைந்தன் வேண்டும்
வரமகிழ்ந்து உதவும்
லாலா லாலா
லாலா வேசமும்
லீலா லீலா
லீலா விநோதனென்று
உன்திரு வடியை
உறுதியென்று எண்ணும்
என்தலை வைத்துன்
இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம்
இறைவன் காக்க
பன்னிரு விழியால்
பாலனைக் காக்க
அடியேன் வதனம்
அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப்
புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டு
கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும்
வேலவர் காக்க
நாசிகள் இரண்டும்
நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப்
பெருவேல் காக்க
முப்பத்து இருபல்
முனைவேல் காக்க
செப்பிய நாவைச்
செவ்வேல் காக்க
கன்னம் இரண்டும்
கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை
இனியவேல் காக்க
மார்பை இரத்தின
வடிவேல் காக்க
சேரிள முலைமார்
திருவேல் காக்க
வடிவேல் இருதோள்
வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும்
பெருவேல் காக்க
அழகுடன் முதுகை
அருள்வேல் காக்க
பழுபதி னாறும்
பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை
விளங்கவேல் காக்க
சிற்றிடை அழகுறச்
செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை
நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை
அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும்
பெருவேல் காக்க
வட்டக் குதத்தை
வடிவேல் காக்க
பனைத்தொடை இரண்டும்
பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள்
கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை
அருள்வேல் காக்க
கைகள் இரண்டும்
கருணைவேல் காக்க
முன்கை இரண்டும்
முரண்வேல் காக்க
பின்கை இரண்டும்
பின்னவள்ளிருக்க
நாவில் சரஸ்வதி
நற்றுணை யாக
நாபிக் கமலம்
நல்வேல் காக்க
முப்பால் நாடியை
முனைவேல் காக்க
எப்பொழு தும்எனை
எதிர்வேல் காக்க
அடியேன் வசனம்
அசைவுள நேரம்
கடுகவே வந்து
கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில்
வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில்
அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில்
எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச்
சதுர்வேல் காக்க
காக்க காக்க
கனகவேல் காக்க
நோக்க நோக்க
நொடியில் நோக்க
தாக்கத் தாக்கத்
தடையறத் தாக்க
பார்க்கப் பார்க்கப்
பாவம் பொடிபட
பில்லி சூனியம்
பெரும்பகை அகல
வல்ல பூதம்
வலாஷ்டிகப் பேய்கள்
அல்லறல் படுத்தும்
அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும்
புழக்கடை முனியும்
கொள்ளிவாய் பேய்களும்
குரளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும்
பிரம் மராஷதரும்
அடியனைக் கண்டால்
அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி
இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும்
எதிர்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும்
காளியோடு அனைவரும்
விட்டாங் காரரும்
மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும்
சண்டாளங்களும்
என்பெயர் சொல்லவும்
இடிவிழுந்து ஓடிட
ஆனை அடியினில்
அரும்பா வைகளும்
பூனை மயிரும்
பிள்ளைள் என்பும்
நகமும் மயிரும்
நீள்முடி மண்டையும்
பாவைகள் உடனே
பல கலசத்துடன்
மனையிற் புதைத்த
வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும்
ஒட்டியப் பாவையும்
காசும் பணமும்
காவுடன் சோறும்
ஓதுமஞ் சனமும்
ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால்
அலைந்து குலைந்திட
மற்றார் வஞ்சகர்
வந்து வணங்கிட
காலதூ தாளெனைக்
கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட
அரண்டு புரண்டிட
வாய்விட்டு அலறி
மதிகெட்டு ஓடப்
படியினில் முட்டப்
பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம்
கதறிடக் கட்டு
கட்டி உருட்டு
கைகால் முறிய
கட்டு கட்டு
கதறிடக் கட்டு
முட்டு முட்டு
முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு
செதில் செதிலாக
சொக்கு சொக்கு
சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து
கூர்வடி வேலால்
பற்று பற்று
பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி
தணலது வாக
விடுவிடு வேலை
வெருண்டது ஓட
புலியும் நரியும்
புன்னரி நாயும்
எலியும் கரடியும்
இனித்தொடாது ஓடத்
தேளும் பாம்பும்
செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள்
கடித்துஉயர் அங்கம்
ஏறிய விஷங்கள்
எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும்
ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம்
வலிப்புப் பித்தம்
சூலைசயங் குன்மம்
சொக்குச் சிரங்கு
குடைசல் சிலந்தி
குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை
படர்தொடை வாழை
கடுவன் படுவன்
கைத்தாள் சிலந்தி
பற்குத் அரணை
பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும்
என்றனைக் கண்டால்
நில்லா தோட
நீயெனக் கருள்வாய்
ஈரேழு உலகமும்
எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும்
அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும்
மகிழ்ந்து உறவாகவும்
உன்னைத் துதிக்க
உன்திரு நாமம்
சரவண பவனே
சைலொளி பவனே
திரிபுர பவனே
திகழொளி பவனே
பரிபுர பவனே
பவமொழி பவனே
அரிதிரு மருகா
அமரா பதியைக்
காத்துத் தேவர்கள்
கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே
கதிர் வேலவனே
கார்த்திகை மைந்தா
கடம்பா கடம்பனை
இடும்பனை அழித்த
இனியவேல் முருகா
தணிகா சலனே
சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை
கதிர்வேல் முருகா
பழனிப் பதிவாழ்
பால குமரா
ஆவினன் குடிவாழ்
அழகிய வேலா
செந்தில்மா மலையுறும்
செங்கல்வராயா
சமரா புரிவாழ்
சண்முகத்தரசே
காரார் குழலாள்
கலைமகள் நன்றாய்
என்நா இருக்க
யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும்
எந்தை முருகனை
பாடினேன் ஆடினேன்
பரவசமாக
ஆடினேன் நாடினேன்
ஆவினன் பூதியை
நேசமுடன் நான்
நெற்றியில் அணியப்
பாச வினைகள்
பற்றது நீங்கி
உன்பதம் பெறவே
உன் அருளாக
அன்புடனனிரட்சி
அன்னமும் சொன்னமும்
மெத்தமெத் தாக
வேலா யுதனார்
சித்திபெற்று அடியேன்
சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க
மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க
வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க
மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க
மலைகுற மகளுடன்
வாழ்க வாழ்க
வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன்
வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள்
எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன்
எத்தனை செய்தால்
பெற்றவள் நீ குரு
பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள்
பெற்றவளாமே
பிள்ளையென்று அன்பாய்
பிரியம் அளித்து
மைந்தன் என்மீதுஉன்
மனமகிழ்ந்து அருளித்
தஞ்சமென்று அடியார்
தழைத்திட வருள்செய்
கந்தர் சஷ்டி
கவசம் விரும்பிய
பாலன் தேவ
ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில்
கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன்
அங்கம் துலக்கி
நேசமுடன் ஒரு
நினைவது ஆகிக்
கந்தர் சஷ்டி
கவசம் தனைச்
சிந்தை கலங்காது
தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத்து
ஆறுருக் கொண்டு
ஓதியே செபித்து
உவந்து நீறணிய
அஷ்டதிக்கு உள்ளோர்
அடங்கலும் வசமாய்த்
திசைமன்னர் எண்பர்
சேர்ந்தங்கு அருளுவர்
மாற்றலர் எல்லாம்
வந்து வணங்குவர்
நவகோனள் மகிழ்ந்து
நன்மை அளித்திடும்
நவமதன் எனவும்
நல்லெழில் பெறுவர்
எந்த நாளும்
ஈரெட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாமங்
கவசத் தடியை
வழியாய்க் காண
மெய்யாய் விளங்கும்
விழியாறய்க் காண
வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப்
பொடி பொடியாக்கும்
நல்லோர் நினைவில்
நடனம் புரியும்
சர்வ சத்துரு
சங்கா ரத்தடி
அறிந்தெனது ¯ள்ளம்
அஷ்ட லட்சுமிகளில்
வீர லட்சுமிக்கு
விருந்து ¯ணவாகச்
சூரபத் மாவைத்
துணிநòதகை யதனால்
þருபத்Ð ²ழ்வர்க்கு
¯வந்த «Óதளித்த
குருபரன் பழநிக்
குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை
சேவடி போற்றி
எனைத்தடுத்து ஆட்கொள்
என்றெனது உள்ளம்
மேவிய வடிவுறும்
வேலவா போற்றி
தேவர்கள் சேனா
பதியே போற்றி
குறமகள் மனமகிழ்
கோவே போற்றி
திறமிகு திவ்விய
தேகா போற்றி
இடும்பா யுதனே
இடும்பா போற்றி
கடம்பா போற்றி
கந்தா போற்றி
வெட்சி புனையும்
வேளே போற்றி
உயர்கிரி கனக
சபைக்கோர் அரசே
மயில்நடம் இடுவோய்
மலரடி சரணம்
சரணம் சரணம்
சரவணபவ ஓம்
சரணம் சரணம்
சண்முகா சரணம்.